--- --:--:-- --

தமிழக அரசே நடவடிக்கை எடு என ஆங்காங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

5

ஸ்ரீவைகுண்ட மண்டல துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் விடுதலைக் களம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் செங்குவநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக விடுதலை களம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

அந்த போஸ்டரில் தமிழக அரசே ஸ்ரீவைகுண்ட மண்டல துணை தாசில்தார் சுடலை தாஸ் வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடு என அச்சிடப்பட்டுள்ளது.

 

மேலும் போலி பட்டா வழங்கி ஊழல் செய்து பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்து ஊழல் அதிகாரி ஸ்ரீவைகுண்ட மண்டல துணை வட்டாட்சியர் சுடலை வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon