செட்டிநாடு சிக்கனில் புழு.. உணவகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்..!
தாம்பரம் அருகே குழந்தைகளுக்கு வாங்கி சென்ற செட்டிநாடு சிக்கனில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளித்தனர்.
சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மெக்கானிக்கான சௌந்தர்ராஜன் என்பவர் தனது குழந்தைகளுக்கு முடிச்சூர் சாலையில் உள்ள பிரியாணி கடையிலிருந்து செட்டிநாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று, திறந்து பார்த்த பொழுது சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பார்சலை உணவக உரிமையாளரிடம் காட்டியுள்ளார். அப்பொழுது தங்களுக்கு எதுவும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். சூடாக கொடுக்கப்பட்ட செட்டிநாடு சிக்கனில் உயிரோடு எப்படி புழு வரும் என அவர் கேட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்தவர் தாம்பரம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்தை முற்றுகையிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





