நாயை வைத்து சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைத்த வனத்துறையினர்..!
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதி மக்களை ஒரு மாதத்திற்கு மேலாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. தர்ணாபுரம் பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் நாயை கட்டி வைத்தனர்.
யாருக்காக யார் காத்திருந்தது என சந்தேகம் எழுப்பும் வகையில் பதுங்கி பதுங்கி கூண்டுக்குள் வந்து சிறுத்தையை பார்த்து நாய் கடுமையாக குரைக்க தொடங்கியது. சிறுத்தை தன்னை தாக்கி விடாமல் தொடர்ந்து கூண்டுக்குள் இருந்த நாய் தடுத்துக் கொண்டே இருந்தது.
கூண்டுக்குள் இருந்த நாயின் சத்தத்தை கேட்ட வனத்துறையினர் விரைந்து வந்து சிக்கிய சிறுத்தையை பிடித்தனர். தன்னை தாக்க விடாமல் தற்காத்துக் கொண்ட நாய் சிறுத்தையையும் சிக்க வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





