திருப்பூரில் 14 வயது சிறுமி கர்ப்பம்.. 62 வயது முதியவருக்கு சிறை..!
திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்த 62 வயதான சிவா என்றவர் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயதை சிறுமி இவரின் கடைக்கு பென்சில் வாங்க வந்துள்ளார். அப்பொழுது கடைக்குள் அழைத்து அந்த சிறுமியை சிவா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பம் தரித்தார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி முதியவர் சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





