சிங்கப்பற்கள் விற்பனை என பேஸ்புக்கில் கல்லா கட்டிய நபர்..!
சிங்கப் பற்கள் விற்பனை செய்ய திருச்சிக்கு வந்த நபரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த சிங்கப் பற்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகுபுரம் பகுயை சேர்ந்த நபர் மலேசியாவில் சரக்கு கப்பலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவர் பணிபுரிந்த சரக்கு கப்பல் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி கென்யா நாட்டில் உள்ள முபாஜா என்ற துறைமுகத்திற்கு சென்ற பொழுது அங்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து இரண்டு சிங்கப்பற்கள் வாங்கியுள்ளார். பின்னர் அந்த சிங்கப்பற்களை விற்பனை செய்வதற்காக அவர் முகநூலில் விளம்பரம் செய்தார்.
இதனையறிந்த திருச்சி வன சரக்கு அதிகாரி கோபிநாத் சிறப்பு குழு அமைத்து சிங்கப் பற்களை வாங்குவது போல் பேசி ஆரோக்கிய கிங்ஸிலே திருச்சிக்கு அழைத்தார். அதனை ஏற்று ராமநாதபுரத்தை சேர்ந்த சாந்தகுமாரும் திருச்சி வந்தனர்.
திருச்சி விமான நிலையம் அருகே அவர்கள் காரில் வந்த பொழுது இருவரையும் வனசரக அதிகாரி கோபிநாத் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு சிங்கப்பற்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வன உயிரின குற்றத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.





