இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு சிலம்பு அணியும் நிகழ்வு..!
தேனி மாவட்டம் கூடலூரில் மங்களாதேவி கண்ணகி கோயிலில் சிறப்பம்சங்களையும் எடுத்து கூறும் விதமாக இரட்டை பெண் குழந்தைகளுக்கு சிலம்பு அணியும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமி ஒட்டி இரு மாநில அரசுகளின் ஒத்தளைப்போடு தமிழகத்தில் இருந்து நடை பயணமாகவும் கேரளாவிலிருந்து ஜீப் மூலமும் லட்சகணக்கான பக்தர்கள், மங்களதேவி கண்ணகி கோவிலை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் அதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோயிலின் சிறப்பு அம்சங்களை எடுத்து கூறும் விதமாக இரட்டை பெண் குழந்தைகளுக்கு சிலம்பு அணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





