--- --:--:-- --

குழந்தையின் அட்மிஷனுக்காக விண்ணப்பம் வாங்க விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்..!

3

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு அட்மிஷன் விண்ணப்பிப்பதற்காக பெற்றோர்கள் இரவு முதல் குவிந்துள்ளனர்.

 

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒரு தனியார் பெண் குழந்தைகள் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு குழந்தை சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதை அறிந்த பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளியில் இருந்து குவிந்து வருகின்றனர்.

 

முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து தற்போது வரை வரக்கூடிய பெற்றோர்களின் பெயர்களை வரிசை எண்களிட்டு எழுதி வைத்து வருகின்றனர். இதில் சில பெற்றோர்கள் பள்ளி வாசலில் இரவு பொழுது தூங்கிக் கழிக்கும் விதமாக ஆயத்தம் ஆகி வந்துள்ளனர்.

 

மேலும் சில பெற்றோர்கள் தண்ணீர் பாட்டிலுடன் இரவு உணவையும் எடுத்து வந்து அமர்ந்துள்ளனர். குழந்தைகள் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் விடிய விடிய காத்திருப்பது அந்த பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

 

Right Menu Icon