--- --:--:-- --

தெரு நாயை கொன்றவர் மீது சின்னத்திரை நடிகை போலீசில் புகார்..!

4

சென்னையை அடுத்த போரூரில் தெரு நாய் வேண்டுமென்றே காரை ஏற்றிக்கொண்டு நபரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

போரூர் எடுத்த ஐயப்பன் தாங்கல் மூன்றாவது தெருவில் கர்நாடக திரைப்பட இயக்குனர் லட்சுமி நாராயணன் சின்னத்திரை நடிகையான அவரது மனைவி கீதா தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் தெருவோர நாய்களுக்கு உணவளித்த பராமரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை கீதாவின் வீட்டின் அருகே உறங்கிக் கொண்டிருந்த தெரு நாய் மீது கார் ஏறியதில் உயிரிழந்து வசிக்கும் ஜவகர் என்பவரிடம் கேட்ட பொழுது தவறுதலாக கார் ஏறியதாக அனுப்பி உள்ளார். பின்னர் சிசிடிவி காட்சி ஆய்வு செய்வதில் ஜவகர் வேண்டுமென்றே தெருவில் படுத்திருந்த நாய் மீது காரை ஏற்றுக்கொன்றது தெரிய வந்தது.

 

உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆதாரத்துடன் சின்னத்திரை நடிகை கீதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் உரிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon