பிரதமரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியா?
பெங்களூருவில் பிரதமரின் காரின் முன்பு நின்று சொம்பு காட்டிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் காரில் பிரதமர் சென்ற பொழுது காங்கிரஸ் கட்சியினர் கையில் சொம்புகளை ஏந்தி கோ பேக் மோடி என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட சிலர் பிரதமர் காரை நோக்கி சென்று சொம்பை காட்டுகின்றனர்.
இதனால் பிரதமரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சதாசிவம் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு கர்நாடகாவிற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி அதை சூசகமாக உணர்த்தும் விதமாக காரின் சொம்பை காட்டி பரப்பரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





