CSK பெயரில் கட்சித் தொடங்கும் கூல் சுரேஷ்..!
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வாக்களித்த பின் பேசிய அவர், கூல் சுரேஷ் கட்சி என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாகவும், விரைவில் தனது கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன் எனவும் கூறினார்.
மேலும், 2026 தேர்தலில் போட்டியிடாவிட்டால் தவெகவுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




