அத மட்டும் நிரூபிச்சிட்டா அரசியலை விட்டு விலக தயார் – அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார்.
அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனது வாக்கைச் செலுத்த அண்ணாமலை வருகை தந்தார்.
வாக்குச் செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளதால், அரசியல் கருத்துகள் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும், தனது தொகுதியில் பாஜக தரப்பில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக யாரேனும் ஒருவர் சொன்னால்கூட, அரசியலிலிருந்தே தான் வெளியேறத் தயார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
பணத்தை வைத்து கோவை தொகுதியில் வென்றுவிடலாம் என திமுக நினைப்பதாகக் குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, தான் இந்தத் தேர்தலில் மிக நேர்மையாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




