காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்பட 10 வேட்பாளர்கள் போட்டி..!
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விளவங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் தரணி அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
தொடர்ந்து எம்எல்ஏ பதவியும் அவர் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
குழித்துறை நகராட்சி மற்றும் இடைக்கோடு கலியக்காவல் உட்பட எட்டு பேரூராட்சி தலைவர்களை உள்ளடக்கிய இந்த தொகுதியில் 2 லட்சத்து 37,382 வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என மொத்தம் பத்து வேட்பாளர்கள் விளவங்கோட்டில் போட்டியிடுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





