--- --:--:-- --

வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகார்..!

3

டலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளது. 1500 க்கும் மேற்பட்டோர் வசிக்கும் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

குறிப்பாக பலரும் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அதே நேரம் 40-க்கும் மேற்பட்ட உயிரிழந்தோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை உட்பட அவரது குடும்பத்தினரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் முகமதுடன் கேட்டதற்கு முன்விரோதம் காரணமாக அந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon