மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுவன் முன் தந்தையை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த சிரஞ்சுகால் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான்.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். இதனிடையே அவர் வீட்டிற்கு காவல்துறையுடன் வந்த அவரது மனைவி வீட்டின் பூட்டை உடைத்துள்ளார்.
இது குறித்து கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த அவரின் மகன் தனது தந்தையை விட்டு விடுமாறு கதறி அழுதுள்ளார்.
இளம் மனதின் குமுறலுக்கு மனம் அடங்காத காவல்துறையினர் சிரஞ்சீவிரலை தொடர்ந்து தாக்கி கைது செய்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




