--- --:--:-- --

குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

4

ஏப்ரல் மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்துகொண்டே புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை நேற்று முன் தினம் ஏப்ரல் 16ஆம் தேதி சவரனுக்கு 640 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

 

அதன்படி இன்று ஏப்ரல் 18ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் ரூ.5,559க்கும் சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.44,792க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90.00க்கும், ஒரு கிலோ ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon