--- --:--:-- --

யாருக்கு தங்க மோதிரம்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி அறிவிப்பு..!

9

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றிய நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.

 

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்தங்கல் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இல்லத்தில் நடைபெற்றது.

 

அப்போது பேசியவர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் 10 பூத்துகளுக்கு ஒரு பூத்துக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் வீதம் 10 மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

 

மேலும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மூன்று ஒன்றிய செயலாளர்கள், 4 பகுதி செயலாளர்கள் உள்ள நிலையில் அதிகமாக பெற்று தரும் முதல் நபருக்கு ஒன்றரைப் போல் தங்க மோதிரமும் அடுத்த இரண்டு நபர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரமும் வழங்கப்படும் எனவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

 

இந்த நடைமுறை விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் பின்பற்றப்படும் எனவும் அவர் கூறினார். இதனால் கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பணி செய்ய துவங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon