ரயிலில் நாகப் பாம்பு..கடித்ததால் அதிர்ச்சி..!
கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் 21 வயது இளைஞரை பாம்பு கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குருவாயூர் மதுரை நகரங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் நேற்று தென்காசியை சேர்ந்த 21 வயதான இளைஞர் கார்த்திக் சுப்பிரமணியம் ஏழாம் எண் கோச்சில் பயணித்து உள்ளார்.
அந்த ரயில் எட்டு வானூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது நச்சுப் பாம்பு ஒன்று கார்த்திக்கை கடித்து வைத்துள்ளது. இதனால் அலறிய அவரை கோட்டையை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ரயில் பெட்டிக்குள் எலிகள் ஏராளமாக காணப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோட்டயத்தில் அந்த பெட்டி முற்றிலும் கழற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





