--- --:--:-- --

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

4

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் மதுபான உரிமைகளை பெற ஆம்ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் வழங்கியதாக எழுந்த புகாரில் கடந்த மார்ச் 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி அழைத்து செல்லப்பட்ட அவருக்கு இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு காவல் வழங்கப்பட்டது.

 

அதன் பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ மனுதாக்கல் செய்தது. அதை ஏற்ற டெல்லி நீதிமன்றம் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து ஏப்ரல் பதினொன்றாம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார்.

 

மூன்று நாட்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon