--- --:--:-- --

தடம் புரண்ட சரக்கு ரயில்.. தெற்கு ரயில்வே விளக்கம்..!

4

வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதாக கூறப்பட்ட நிலையில் வெப்ப உராய்வின் காரணமாக ரயில் சக்கரம் பழுதடைந்ததாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

சென்னை துறைமுகத்திலிருந்து பெங்களூருவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. திடீரென சரக்கு ரயில் சக்கரம் ஓடு பாதையை விட்டு விலகியது. இதன் காரணமாக அந்த வழியில் இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் நீலகிரி, சேலம் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது.

 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரயில் சக்கரம் சரி செய்யப்பட்ட நிலையில் சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதனிடையே வெப்ப உராய்வின் காரணமாகவே ரயில் சக்கரம் பழுதடைந்ததாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon