புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளி பிரிவு இயங்காது..!
நாளை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை விடுமுறை என்பதால் புதுச்சேரி ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை உள்ளிட்ட உட்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல இயங்கும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





