தபால் வாக்குக்காக வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டம் மேகநாதபுரத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசிக்கும் யாரும் தபால் வாக்குகளை பதிவு செய்யவில்லை.
விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுர மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
வயதானவர்களிடம் தபால் வாக்குகளை பெறுவதற்காக அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





