திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் ரெய்டு..!
திருத்தணியில் திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் ரீட்டா பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் திமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஜெயக்குமாரின் வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஜெயக்குமாரின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மூன்று பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





