தேர்தலில் மகன் தோற்க வேண்டும் என விரும்பும் தந்தை..!
கேரளாவில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தனது மகன் தோல்வி அடைய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ.கே.ஆண்டனி பட்டணம்திட்டா பகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள தனது மகன் தோல்வியை தழுவ வேண்டும் என கூறியதோடு அவரை எதிர்த்து களம் காணும் ஆண்டனி வெற்றி பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தான் தன்னுடைய மதம் என தெரிவித்த ஏ.கே.ஆண்டனி காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணைவது மிகவும் தவறு என கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான அணில் ஆண்டனி கடந்த 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தார்.
அவரது தந்தையான ஏ.கே.ஆண்டனி அப்பொழுதே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அஞ்சலி களமிறங்கியுள்ளது தந்தை – மகனிடையேயான மோதலை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





