தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை..!
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் தொடங்கியது. நாள்தோறும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை தமிழகத்தில் ஈகை திருநாள் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இவை தொடர்ந்து தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாண்டு அணிந்து உற்றார் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





