செல்பி எடுக்க வந்த இளைஞரை திட்டி செல்போனை பிடுங்கி எறிந்த சீமான்..!
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் வித்யா ராதிகா அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்பொழுது எதிர்கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து விட்டு நாம் தமிழர் கட்சியின் சின்னமான மைக் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பாடல் பாடி ஓட்டு கேட்டார். சீமான் பாட்டு பாடி கொண்டிருந்தனர். மேடைக்கு திடீரென ஓடி வந்த இளைஞர் ஒருவர் சீமானிடம் சென்று செல்ஃபி எடுக்க முற்பட்டார்.
உடனே மேடையில் இருந்த நிர்வாகிகள் பதறி ஓடி சென்று இளைஞரை அப்படியே தூக்கி செல்ல இளைஞரிடம் இருந்து செல்போனை சீமான் பிடுங்கிக் கொண்டார். தொடர்ந்து அந்த இளைஞரை முறைத்த சீமான் முட்டாப் பையன் அவனவன் பிரச்சனை அவனுக்கு என அந்த இளைஞரை கடிந்து கொண்டார். இருப்பினும் தொடர்ந்து பாடல் பாடி சீமான் வாக்கு சேகரித்தார்.





