தேர்தலை புறக்கணிக்க போகிறோம் – விவசாயிகள் சங்கம்
நீலகிரி மாவட்டத்தில் பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காததால் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை 30 ரூபாய்க்கு மேல் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 2க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேயிலை விவசாயிகளிடம் விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





