--- --:--:-- --

தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..!

1

தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் , உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் , நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

வரும் 8ம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon