துரத்திச் சென்று மன்சூர் அலிகானை மறித்த அதிமுகவினர்..!
வேலூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளரை விமர்சித்துச் சென்ற மன்சூர் அலிகானை துரத்தி சென்று அதிமுகவினர் சண்டை போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவரராஜபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அதே பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்து புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மன்சூர் அலிக்கான், அதிமுகவினரை பார்த்து அம்மாவை கொன்றுவிட்டு ஓட்டு கேட்க வந்தார்கள் என்றும் தேர்தலில் தோற்பதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு வேகமாக சென்றார்.
இந்த பேச்சால் ஆவேசமடைந்த அதிமுகவினர் அவரை விரட்டி சென்ற பொழுது மன்சூர் அலிகான் காரை வழிமறித்து அவர்களை கடுமையாக திட்டிதாக கூறப்படுகிறது. காரை விட்டு வெளியே வரும்படி தெரிவித்ததோடு அவரை அடிக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது. சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





