--- --:--:-- --

ஆண் நண்பருடன் தங்கி இருந்த பெண் மரணம்..!

7

செய்யாரில் ஆண் நண்பருடன் தங்கி இருந்த பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பல் பணம் திருடி சென்ற நிலையில் இதில் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

காஞ்சிபுரம் வஉசி தெருவை சேர்ந்தவர் வேலு மகள் சுஜாதாவிற்கு திருமணம் ஆகாத நிலையில் அவருடன் பணியாற்றிய கங்காதரன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுஜாதாவையும் கங்காதரணையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

மேலும் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த சுஜாதா அங்கேயே மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரை கங்காதரனும் திருமண மண்டப ஊழியர்களும் சேர்ந்து செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சுஜாதாவின் அண்ணன் சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் இதில் தொடர்புடைய பூபதி, பார்த்திபன், மணி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon