பரோட்டா சுட்டு ஓட்டு கேட்ட ராஜேந்திர பாலாஜி..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் மக்களவை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் சிவகாசியில் கடந்த மூன்று நாட்களாக பரப்பரை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை களத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருவரும் வீடு வீடாக சென்ற நிலையில் ஹோட்டலுக்குள் சென்று பரோட்டா சுட்டு பரப்புரை மேற்கொண்டார். பரப்புரைக்கு நடுவே இருவரும் அதே ஹோட்டலில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு பசியாற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





