--- --:--:-- --

பரப்புரையில் சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு பதிவு..!

4

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக விஜயகுமார் போட்டியிடுகிறார்.

 

பரப்புரையில் சிறுமி ஒருவரை சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது வாகனத்தில் தேர்தல் பார்க்கும் படையினர் சோதனையிட்டனர்.

 

அதில் போதும் மோடி என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டிஷர்ட்டுகள், நோட்டீஸ்கள் மற்றும் பதாகைகள் இருந்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை என்பதால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon