--- --:--:-- --

நாளை வெளியாகும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை..!

10

க்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி நாளை காலை 11:30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.

 

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விலைவாசி குறைப்பு, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon