அடுத்தடுத்து தமிழகம் வரும் பிரதமர் மோடி..!
4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். வரும் ஒன்பதாம் தேதி தமிழகம் வரும் பிரதமர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
அதேபோல அன்றைய தினம் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோத் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதேபோல 10ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் இந்த மூன்று பகுதிகளிலும் வாகன பேரணியாக செல்ல பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல 10-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரித்து கோவையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் பெரம்பலூரில் பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வரும் 4 மற்றும் 5-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
குறிப்பாக நான்காம் தேதி தேனி தொகுதியில் டிடிவி தினகரனை ஆதரித்து வாகன பேரணியில் செல்ல உள்ளார். அதேபோல் தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியன் ஆதரித்தும் வாகன பேரணியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து 5ம் தேதி மதுரை வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்தும் பேரணி செல்லவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




