50 அடி உயர ராட்சத பேனரில் இருந்து அறுந்து விழுந்த ஒயர்..!
வேலூரில் ராட்சத விளம்பர பலகை அகற்றிய போது சாலையில் தொங்கிய கயிற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் அடுத்தடுத்த காயமடைந்தனர். சத்துவாச்சாரியில் சுமார் 50 அடி உயரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே இருந்த டிஜிட்டல் பேனரை அகற்றிவிட்டு புதிய பேனர் அமைக்கும் பணியில் ஆறு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விளம்பர பேனரில் கட்டப்பட்டிருந்த பைபர் கேபிள் ஒயர் அருந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது.
இதில் இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொருவருக்கு தலை, கை, கால்களில் ஒயர் உரசி காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பகுதி மக்கள் அங்கு திரண்டதால் அச்சமடைந்த ஊழியர்கள் கீழே இறங்காமல் தவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை வைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





