--- --:--:-- --

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் கொட்டி கிடந்த எண்ணெய்.. சறுக்கிய வாகனங்கள்..!

5

சென்னை கோடம்பாக்கம் பாலத்தில் எண்ணெய் கசிந்து கிடந்ததால் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்திற்கு உள்ளாகின. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் வழியில் எண்ணெய் கொட்டி கிடந்தது.

 

அந்த வழியாக சென்று ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சறுக்கி உள்ளன. இதில் வாகன ஓட்டிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 

இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் படி போக்குவரத்து காவல்துறையினர் எல்லை மீறி மணலைக் கொட்டி சாலையை சீரமைத்தனர். காலை 5 மணி அளவில் சென்று அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து எண்ணெய் கொட்டியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon