--- --:--:-- --

திருமுருகன் பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  சிவகுமார் பா.ஜ.க வில் ஐக்கியம்..!

11

திருப்பூர் திருமுருகன் பூண்டி நகராட்சியில் 22 வது வார்டு கவுன்சிலராக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பார்வதி சிவகுமார் உள்ளார். இவர் முதன்முறையாக கட்சி சார்பில்  போட்டியிட்டு ஜெயித்தவர்.

 

இவருடைய கணவர் சிவகுமார். இவர் பூண்டி பஸ் நிறுத்தம் அருகே டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் மெக்கானிக் வேலையும், பாத்திரங்களை வாடகைக்கு விட்டும் தொழில் செய்து வருகிறார். நடந்த ஒரு வருடமாக நகராட்சியில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரிடம் முறையிட்டுள்ளார். அவரும் சரியானபடி நடவடிக்கை எடுக்கவில்லை.

 

அதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி கணவா்  சிவகுமார்    இன்று காலை 11.00 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் பயணம் மேற்கொண்டிருந்த மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் சால்வை அணிவித்து பா.ஜ.க வில் ஐக்கியமானார். இதே போல அதிமுகவை சேர்ந்த நிர்வாகி பழக்கடை சேகரும் பா.ஜ.க வில் சேர்ந்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon