--- --:--:-- --

காதலனை மறக்க முடியாத பெண்.. திருமணத்திற்கு பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

11

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே புது சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதை ஊரைச் சேர்ந்த தேன்மொழி என்பவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையை சேர்ந்த முரணி கோவையை சேர்ந்த முரளி என்பவருடன் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தேன்மொழி என்பவர் முரளியுடன் கோவையில் வசித்தார்.

 

திருமணத்திற்கு பிறகும் தேன்மொழியும் மணிகண்டனும் பழகி வந்துள்ளனர். தேன்மொழி அடிக்கடி மணிகண்டன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்த முரளி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறி மணிகண்டனை சந்தித்துள்ளார்.

 

அதே வேளையில் தனது மனைவியை காணவில்லை என முரளி கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே மணிகண்டனை சந்தித்து உங்களை மறக்க முடியாமல் தவிப்பதாக கூறி கண்ணீர் வடித்துள்ளார். இதையடுத்து இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

 

தொடர்ந்து நேற்று பாலக்காட்டில் இருந்து பழனி செல்லும் ரயில் முன்பு விழுந்து தேன்மொழியும், மணிகண்டனும் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த பழநி ரயில்வே போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon