பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பழனி ரயில் நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பைத்தொட்டி, கடைகள் மற்றும் ரயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





