உயிரோடு இருக்கும் மூதாட்டியின் பெயர் குடும்ப அட்டையிலிருந்து நீக்கம்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உயிரிழந்துவிட்டதாக கூறி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியின் பெயர் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டிக்கு ஓராண்டுக்கு முன்பு அரசின் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தப்பட்டதால் மூதாட்டி தபால் நிலையத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
அப்பொழுது நீங்கள் இறந்து விட்டதாக கூறி பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தன் பெயரை மீண்டும் குடும்ப அட்டையில் சேர்த்து ஓராண்டாக நிறுத்தி வைத்துள்ள ஓய்வூதியத்தை வழங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





