மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாங்காய் பறிக்க மரத்தில் எறிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான். பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அஜய் விடுமுறை தினம் என்பதால் விவசாய நிலத்தில் நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளான்.
அப்பொழுது அங்கிருந்த மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க சிறுவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது. மரக்கிளையில் ஏறும் பொழுது தவறி கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான்.
இதையறிந்த அந்த பகுதி மக்களுக்கு கிணற்றிலிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.





