--- --:--:-- --

1000 சகோதரிகளுக்கு நமோ டிரோன் வழங்குகிறார் பிரதமர் மோடி..!

9

டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெண்கள் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆயிரம் சகோதரிகளுக்கு நமோ டிரோன்  வழங்க உள்ளார்.

 

மேலும் வங்கிகள் முகாம்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவி குழுக்களுக்கு 8000 கோடி கடன்களை பிரதமர் வழங்க உள்ளார். அதனுடன் சுய உதவி குழுக்களுக்கு 2000 கோடி நிதியும் வழங்க உள்ளார். பிரதமர் மோடி வரும் 15ஆம் தேதி மீண்டும் கேரளா வர உள்ளார்.

 

பாலக்காட்டில் நடைபெறும் சாலை பேரணியில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு பங்கேற்க உள்ளதால் கேரளாவில் உள்ள பாஜகவினர் உற்சாகமடைந்தனர்.

 

Right Menu Icon