பெண்கள் கழிவறைக்குள் புகுந்த நபர்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பெண் கழிவறையில் நள்ளிரவில் புகுந்து தாழிட்டுக் கொண்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த 57 வயதான மூர்த்தி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து கல்லூரி சாலை அருகே கிடந்ததாக கூறப்படும் நிலையில் அதன் வழியாக சென்ற பொது மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவருக்கு முதலுதவி கொடுத்து அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் முதியவர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்திற்குள் புகுந்து கொண்டு கையில் தடியுடன் அங்குமிங்கும் ஓடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.
பின்னர் திடீரென அங்கிருந்து பெண்கள் கழிவறையில் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்ட நிலையில் ஊழியர்கள் அவரை வெளியே வரும்படி கூறி போராடியுள்ளனர். யார் கூறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த முதியவர் வெளியே வராததையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு கதவை உடைத்து முதியவரை மீட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





