--- --:--:-- --

பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 10 லட்சம் பேர் பாதிப்பு..!

6

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 214 நபர்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 60 லட்சம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்துள்ளதாகவும் இதன் மூலம் மக்கள் தொகையை 13% அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon