--- --:--:-- --

குடிநீருக்காக ஆறுகளை தேடி அலையும் மக்கள்..!

5

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதிய நீர் நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர மக்கள் வலியுறுத்துகின்றனர். தெற்கு மூன்றாவது பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் தொட்டி கட்டியதால் அந்த கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றார்.

 

இதனால் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கி வருவதால் அடிக்கடி கழிவுநீர் கலந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தங்களது கிராமத்திற்கு புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி உடனடியாக காட்டி தரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

இது குறித்து புள்ளிமான் கோட்டை ஊராட்சி தலைவரிடம் கேட்ட பொழுது விரைவில் கட்டப்படும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon