குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போல் பரவும் போலி வீடியோ..!
குழந்தைகளை கடத்த முயற்சி செய்வது போல போலி வீடியோ பரவி வரும் நிலையில் மக்கள் அச்சமடைய வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆடியோக்கள் பரப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறை தற்பொழுது ஒரு விளக்கமளித்துள்ளது. குறிப்பாக இந்த வீடியோ அனைத்துமே போலி என்று தெரிவித்துள்ளது.
குழந்தை கடத்துவது போல யாரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





