இல்லத்தரசிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.. கணவர்களை எச்சரித்த நீதிபதி..!
வேலைக்கு செல்லும் கணவர்களை விட இல்லத்தரசிகள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் இன்று மனு ஒன்றின் மீதான விசாரணையின் பொழுது இல்லத்தரசிகள் குறித்த கருத்தை தெரிவித்தது.
வீட்டில் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு, வேலைக்கு சென்று கணவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவது கிடையாது என்றும் குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் பெரு மதிப்பிற்குரியவர்கள் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அவர்களின் பங்களிப்பை கணக்கிடுவது கடினம் என்றும் வேலைக்கு செல்லும் கணவர்களை விட இல்லத்தரசிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





