பொம்மை விற்றுக் கொண்டிருந்த பொழுது குழந்தை மாயம்..!
புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை காரைக்காலில் மீட்கப்பட்டது. நரிக்குறவர் காலணியை சேர்ந்த தம்பதியர் கடற்கரை சாலையில் புதன்கிழமை இரவு பொம்மை விற்றுக் கொண்டிருந்த பொழுது சணல்யா என்று அவர்களது பெண் குழந்தை மாயமானது.
இந்த நிலையில் காரைக்காலில் குழந்தை ஒன்றுடன் சென்ற பெண்ணை சந்தேகத்தின் பேரின் போலீசார் பிடித்து விசாரித்ததில் புதுச்சேரியில் கடத்தப்பட்ட சணல்யா அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





