திருப்பதியில் இளைஞரை கடித்து கொன்ற சிங்கம்..!
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் நுழைந்த இளைஞர் சிங்கம் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென ஏறி குதித்த இளைஞரை சிங்கம் கடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சிங்கம் கடித்துக் குதறியதில் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





