--- --:--:-- --

அந்த மாதிரி இருந்தால் பட வாய்ப்பு.. வடிவேலு பாம்பு மாதிரி!!

4

தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்த்தி, வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், வடிவேலுடன் ஒரு படத்தில் நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீ நல்லா நடிக்கிற என்று சொல்லி பாராட்டினார் ஆனால் படத்தில் காட்சி இருக்காது. தன்னை விட யாராவது நன்றாக நடித்துவிட்டால் அவர்கள் தன்னுடன் இருக்க கூடாது என்ற கொள்கையை கொண்டவர் வடிவேலு.

 

வடிவேலு தன்னுடன் இருப்பவர்களுக்கு தான் பட வாய்ப்பு கொடுப்பார். 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவை என்னையும் இயக்குனர் சிம்புதேவன் கமிட் செய்து இருந்தனர். ஆனால் வடிவேலு, “அவுங்க எல்லாம் பார்த்த மூஞ்சிகள் அதனால் இந்த படத்துல வேண்டாம்” என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். கடைசியில் அந்த படம் டேக் ஆஃப் ஆகவே இல்லை. வடிவேலு ஒரு பாம்பு மாதிரி. அவருடைய குணம் அப்படி தான் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon