இடிந்து விழுந்த வீட்டின் கான்கிரீட் பலகை.. உயிரிழந்த தொழிலாளர்கள்..!
கோழிக்கோடு அருகே கட்டுமான பணியின் பொழுது வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் நாதாபுரம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வந்தது. இரண்டாவது மாடியில் பணி நடைபெற்று வந்த பொழுது திடீர் என வீட்டின் கான்கிரீட் பலகை பெயர்ந்து விழுந்தது.
அப்பொழுது கான்கிரீட் பலகையில் இடிபாடுகளுக்கு இடையே 5 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 தொழிலாளிகள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





